Tuesday, 13 August 2019

SUPER DELUXE REVIEW



                                        சினிமா விமர்சனம்

படம்              : சூப்பர் டீலக்ஸ்
இயக்குனர் : தியாகராஜ குமாரராஜா
நடிகர்கள்    : விஜய் சேதுபதி , பகத் பாசில் , மிஸ்கின் , சமந்தா , ரம்யா                                            கிருஷ்ணன் , காயத்ரி
இசை             : யுவன்சங்கர்ராஜா
தயாரிப்பு    : சத்யராஜ நடராஜன்
Image result for superdeluxe tamil review


மையக்கதை : செக்ஸ், விடலை சிறுவர்கள் முதல் வயோதிக பெரியவர்கள் வரை எப்படி பேச்சாகவும், செயலாகவும் முழுக்க முழுக்க வியாபித்திருக்கிறது என்பதை காண்போர் கண் மற்றும் காதுகள் கூசும் அளவிற்கு, ரொம்பவே டீடெய்லாக சித்தரிக்க வேண்டும் என்பதையே இப்படத்தின் மையக்கருவாக கொண்டு செயல்பட்டிருக்கின்றனர் இப்படக்குழுவினர் மொத்தமும் என்றால் அது மிகையல்ல!

கதை : கணவனுக்குத் தெரியாமல் கல்லூரி காலத்து காதலனை வீட்டிற்கே செக்ஸுக்கு அழைத்து கொலை பாவத்துக்கு ஆளாகும் இளம் பெண், அவரை கொலைப்பழியில் இருந்து மீட்டெடுக்க போராடும் கணவன், பள்ளி இறுதிப் படிப்பு முடிவதற்கு முன் பள்ளியறை படிப்பு படிக்க ஆசைப்பட்டு 3D வீடியோ சிடிக்கள் வாங்கி வந்து டிவி முன் அமரும் மாணவர்கள் நால்வரில் ஒரு மாணவனின் தாய்தான் அந்த செக்ஸ்பட நடிகை என்பது தெரிந்ததும் ஆத்திரத்திற்கு உள்ளாகும் அந்த மாணவனால் அவதிக்குள்ளாகும் அந்த மாணவர்கள் படும் பாடு இந்த செக்ஸ் படநடிகையின் கணவர் சாமியார் ஆகி மக்களை படுத்தும் பாடு,

திருமணமாகி சில நாட்களிலேயே கர்ப்பவதி மனைவியை பிரிந்து மும்பை சென்று தன் ஹார்மோன் கோளாறால் ஐந்தாறு வருடங்களுக்கு பின் அரவாணியாக ஊர் திரும்பி பெற்ற மகனுடன் அவன் படிக்கும் பள்ளிக்கு போய் சொல்ல இயலாத அவமானங்களுக்கு உள்ளாகும் ஒரு திருநங்கைக்கும் அவரது குடும்பத்திற்கும் ஏற்படும் அவல நிலை, இவர்களது இன்னல்களையெல்லாம் தனது செக்ஸ் வக்கிர பார்வைக்கான ஜன்னல்கள் ஆக்கி, அகப்படும் அந்த குடும்பங்களின் உறுப்பினர்களை தனது செக்ஸ் வடிகால் ஆக்கிகொள்ளத் துடிக்கும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இதுதான் "சூப்பர் டீலக்ஸ் "படத்தின் மொத்தக்கதையும் களமும்

முடிவுரை : படத்தின் பல்வேறு விதமான கதாபாத்திரங்களை ஒன்றாக இணைக்கும் சம்பவங்கள் பார்ப்பதற்கு சற்று வேடிக்கையாக இருப்பதோடு மட்டுமில்லாமல், வியப்பையும் உண்டாக்கும் வண்ணம் இருப்பது வாழ்க்கையின் எதார்த்தத்தை காட்டுகிறது .

கருத்து  :    யுவன் ஷங்கர் ராஜா-வின் பின்னணி இசை படத்திற்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது .மக்களின் நடப்பு வாழ்க்கையையும், இயல்பையும் எடுத்துரைத்திருப்பது படம் பார்க்க கொஞ்சம் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.படத்தில் ஆங்காங்கே முகம் சுளிக்கும் விதமாக சில காட்சிகள் அமைந்துள்ளதால் இப்படம் குடும்பங்களிடையே பெரிதும் வரவேற்பை   பெறவில்லை .மொத்தத்தில் படமானது 100க்கு 92 மதிப்பெண் பெரும்.