Thursday, 3 October 2019

PECHUKALAI ARTICLE TAMIL 1

                       
                                                  பேச்சுக்கலை 


                                ஆயகலைகள் 64 இருப்பினும் அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது   பேச்சுக்கலை .ஏனென்றால் வாயுள்ள பிள்ளை எங்கு சென்றாலும் பிழைத்து கொள்ளும் என்ற வாசகம் நம்மிடையே பகிர்ந்துகொண்ட ஒன்றே மற்றும் நம் அனைவரும் அறிந்த ஒன்றே.

                                   " வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் " 
  
                                 பேசும்போது எப்படி பேசவேண்டும் எவ்வாறு பேசவேண்டும் என்ற சில வழிமுறைகளும் சில பல நுட்பங்களும்  உள்ளன.அவற்றை பின்வருமாறு காண்போம்.
                                  
                                  பேச்சுக்கலைக்கு மிகவும் முக்கியமான  மூன்று விதிமுறைகள் உள்ளன.விதிமுறைகள் என்று சொல்ல இயலாவிட்டாலும் வழிமுறைகள் என்று கூட சொல்லலாம் .தொடக்கப்பகுதி , இடைப்பகுதி , முடிவுப்பகுதி ; இவை மூன்றும் மிக முக்கியமான ஒன்று.

                                தொடக்கம் :
                                    
                                  பேச்சுக்கு தொடக்கமானது  மிக முக்கியமான ஒன்று காரணம் பேச்சின் தொடக்கத்திலே அனைவரின் காதையும் , மனதையும் ஈர்க்கும்வண்ணம்  அமைத்தல் மிகவும் சிறப்பான ஒன்று.

                                இடைப்பகுதி :

                                   பேச தொடங்கிய ஓரிரு மணித்துளிகளில் சொல்ல வந்த கருத்தை சொல்ல ஆரம்பித்து விடவேண்டும்.ஏனென்றால் அப்போதுதான் பேச்சானது முழுமை அடையும்.பேச்சுக்கு தொடக்கத்தை போன்று சொல்ல வந்த கருத்தானது மிகவும் முக்கியமான ஒன்று.

                               முடிவுப்பகுதி :

                                  தொடக்கம் எவ்வாறு அமைந்தது அவ்வாறு முடித்தலும் அமைய வேண்டும் . ஏனென்றால் பகுதி முழுவதும் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் , முடிவில் ஏற்படுத்திய சிறிய தவறினால் முழுவதும் கெடுத்துவிடக்கூடிய நிலைமை உண்டாக்கும்.எனவே தொடக்கத்தை போன்றே முடிவும் அமைதல் மிகவும் நல்லாதானே ஒன்று.

                              பேச்சுக்கலைக்கு வித்திட்டவர்கள் :   


                                   அறிஞர் அண்ணா  , காமராசர் , மறைமலை அடிகள் , வ . உ .சி , கருணாநிதி போன்றோரின் பேச்சுக்கலைகள் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே . சாதாரண பேச்சுக்கும், மேடைப்பேச்சுக்கும் நிறைய வித்யாசங்கள் உண்டு .

                             
                     
                                  பேச்சுக்கலையின் சில நுட்பங்கள் :

                                   பேசும்போது ஏற்ற இறக்கங்களுடன் பேசுதல் , உடல் பாவங்களை காண்பித்துக்கொண்டு பேசுதல் , நிறைய சான்றுகளும் , பாடல் கவிதைகளும் , ஆங்காங்கே சிறு சிறு கதைகளும் வைத்து பேசுவது காண்போரை கவரும் விதமாகவும் பேச்சை கேட்க ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் அமையும் .விரைந்து முடித்தல் மிகையினும் நன்று .


  

Wednesday, 2 October 2019

OWN CREATING AD



                                   COMMERCIAL ADVERTISEMENT



2 EDITING PHOTOS




                                                   EDITING PHOTOS

                                                        


  BEFORE

   




                                                         AFTER
























                                                           BEFORE

  


                                                                       AFTER













NEWS FOR MAGAZINE


                         கே.எஸ். அழகிரி  தலைமையிலான பேரணி


Image result for ks.azhagiri related  pictures
மக்களவை      தேர்தலில்
காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக வெளிவந்த செய்தியை தொடர்ந்து, தமிழகத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதனை எதிர்த்து ராகுல் காந்தியே தலைவராக நீடிக்க வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேனாம் பேட்டை  முதல் காமராஜர் அரங்கம் வரை  பேரணி நடைபெற்றது. பேரணியின் இறுதியானது  காமராஜர் சிலை   முன்பு முடிவுப்பெற்றது. இந்த பொது கூட்டத்தில் சட்டப்பேரவை கே.ஆர்.ராமசாமி , முன்னாள் தமிழக காங்கிரஸ்  தலைவர்கள் கே.வி.தங்கபாலு , ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் , திருநாவுகரசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொதுகூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொது காங்கிரஸ் தொண்டர்கள்  இருவர் தீக்குளிக்க  முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

SHORTSTORY FOR MAGAZINE






                                     பொற்காசு



முன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு மீன் என்றால் உயிர். ஒருநாள் மீனவன் ஒருவன் மிகவும் அழகான பெரிய மீன் ஒன்றை அரசவைக்குக் கொண்டு வந்து அரசனிடம் தந்தான்.  அந்த மீனைக் கண்டு மகிழ்ந்த அரசன் மீனவனுக்கு உடனே நூறு பொற்காசுகள் பரிசளிக்குமாறு கட்டளை இட்டான். பக்கத்திலே அமர்ந்திருந்த அரசிக்கு இந்தச் செயல் பிடிக்கவில்லை.

அரசனைப் பார்த்து, ""நாளைக்கே நம் வீரர்கள் யாரேனும் செயற்கரிய வீரச் செயல் செய்து வந்தால், நீங்கள் வழக்கம் போல நூறு பொற்காசுகள் பரிசளிப்பீர்கள். ஆனால், பரிசு பெறுபவன், ஒரு மீனவனுக்குக் கொடுத்ததைத்தானே, அரசர் நமக்கும் தந்துள்ளார் என்று நினைப்பான். அதனால், அந்த மீனவனுக்குக் கொடுத்த பரிசை ஏதேனும் சொல்லித் திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள்!'' என்றாள்.

""நீ சொல்வது சரிதான். ஆனால், கொடுத்த பரிசை மற்றவர் குறை சொல்லாதபடி எப்படித் திரும்ப வாங்குவது?'' என்று கேட்டான் அரசன்.
""அந்த மீன் ஆணா? பெண்ணா? என்று கேளுங்கள். அவன் ஆண் என்று சொன்னால் பெண் மீன் வேண்டும் என்று மீனைத் திருப்பித் தந்து விடுங்கள். பெண் என்று சொன்னால் ஆண் மீன் வேண்டும் என்று சொல்லுங்கள்!'' என்றாள் அவள்.
அரசனுக்கு தன் மனைவியின் அறிவுரை மிக நல்லதாகப்பட்டது.
மீனவனைப் பார்த்து, ""நீ கொண்டு வந்த மீன் ஆண் மீனா, பெண் மீனா?'' என்று கேட்டான்.
அதற்கு அந்த மீனவன் பணிவாக, ""அரசே! இது ஆணுமல்ல, பெண்ணும் அல்ல, பொதுவான மீன்!'' என்றான்.
மீனவனிடமிருந்து தான் சற்றும் எதிர்பாராத பதில் வந்ததைக் கண்டு அரசன் பெரிதும் மகிழ்ந்தான். அந்த மகிழ்ச்சியில் அவனுக்கு மேலும் நூறு பொற்காசுகள் தரும்படி கட்டளை இட்டான்.
""ஐயோ! நூறு பொற்காசுகள் கொடுத்ததே அதிகம். அதைத் திரும்ப வாங்குங்கள் என்றால், மேலும் நூறு பொற்காசுகள் தந்துவிட்டீர்களே!'' என்று கோபத்துடன் சொன்னாள் அரசி.
""நான் மகிழ்ச்சி அடையும் போதெல்லாம் நூறு பொற்காசுகள் பரிசு தருவது வழக்கம். இப்போது அவன் சொன்ன பதிலால் மகிழ்ச்சியடைந்து அவனுக்குப் பரிசு தந்தேன். என்ன செய்வது?'' என்றான் அரசன்.
இரண்டு பொற்காசுப் பைகளையும் பெற்றுக் கொண்ட மீனவன், அரசனை வணங்கி விடைபெற்றான்.
பையில் ஓட்டை இருந்ததால் திரும்பிச்செல்லும் போது ஒரு பொற்காசு கீழே விழுந்தது. இதைப் பார்த்த மீனவன் அந்தக் காசு எங்கே உள்ளது என்று தேடிக் கண்டுபிடித்துப் பையில் போட்டுக் கொண்டான்.
இதை அரசனும், அரசியும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
உடனே அரசி, ""நீங்கள் அவனுக்கு இருநூறு பொற்காசுகள் பரிசு தந்தீர்கள். ஓர் பொற்காசு கீழே விழுந்தால் என்ன? நம் வீரர்கள் யாரேனும் எடுத்துக் கொள்ள மாட்டார்களா? எவ்வளவு பேராசை அவனுக்கு. இதையே காரணமாகக் காட்டி அவனுக்குக் கொடுத்த பரிசைத் திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள்!'' என்றாள்.
அரசனுக்கும் தன் மனைவி சொன்னது சரி என்றே பட்டது.
மீனவனை அழைத்து, ""கீழே விழந்த ஒரே ஒரு காசை ஏன் அவ்வளவு கடினப்பட்டுத் தேடினாய்? இருநூறு பொற்காசுகள் கிடைத்தும் உனக்கு நிறைவில்லையா?'' என்று கோபத்துடன் கேட்டான்.
மீண்டும் அரசனைப் பணிவுடன் வணங்கிய மீனவன், ""அரசே! அந்தப் பொற்காசு கிடைக்கவேண்டும் என்ற பேராசையால் நான் தேடவில்லை. இக்காசின் ஒரு பக்கத்தில் உங்கள் உருவமும், மற்றொரு பக்கத்தில் நம் அரசின் இலச்சினையும் பொறிக்கப்பட்டு உள்ளது. யார் காலிலேனும் இக்காசுபட்டுவிட்டால் பெருமை மிகுந்த தங்களை அவமதித்ததாக ஆகுமே என்பதற்காகத்தான் தேடினேன்!'' என்று பதில் தந்தான்.
சாமர்த்தியமான இந்த பதிலைக் கேட்டு மகிழ்ந்த அரசன் அவனுக்கு மேலும் நாறு பொற்காசுகள் பரிசளிக்கக் கட்டளை இட்டான்.
இதைக் கண்ட அரசி, இதற்குமேல் ஏதாவது யோசனை கூறினால், மேலும் பல பொற்காசுகளை இழக்க வேண்டியிருக்கும் என்று எண்ணி வாயை மூடிக்கொண்டாள்.

Tuesday, 1 October 2019

கீழடி அகழ்வாராய்ச்சி ARTICLE FOR MAGAZINE



      கீழடி அகழ்வாராய்ச்சி


             சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய்,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும்,சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனா்.
         சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்மணிகள் மட்டுமே 600 கிடைத்துள்ளன.முத்துமணிகள்,பெண்களின் கொண்டை ஊசிகள், பெண்கள் விளையாடிய சில்லு,தாயக்கட்டை,சதுரங்க காய்கள்,சிறுகுழந்தைகள்விளையாடிய சுடுமண் பொம்மைகள் ஆகிய சங்க காலம் குறிப்பிடும் பல தொல்பொருட்களும் இங்கு அதிகளவில் கிடைத்திருக்கின்றன.

                    அதேபோல, இங்கு கிடைத்துள்ள நூல் நூற்கும் தக்ளி, அக்கால மக்கள் நூல் நூற்று ஆடை நெய்து அணிந்து வாழ்ந்திருப்பதை உறுதி செய்கிறது.பட்டிணப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளின் அருகே இக்கேணிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.அதிகளவில் செங்கல் வீடுகளும் வீடுகளின் மேற்கூரையில் ஓடுகள் வேயப்பட்டிருந்ததையும் இங்கு கிடைத்துள்ள சான்றுகளின் மூலம் உணர முடிகிறது.
                    குடிநீா் தேவைக்காகவும், வீட்டின் பிற பயன்பாடுகளுக்காகவும் உறைகிணறு தோண்டும் முறை சங்க காலம் முதல் அண்மைக் காலம் வரை இருந்துவருகிறது.சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் பட்டிணப்பாலை என்ற நூலில் பூம்புகார் நகரத்தின் ஒருபகுதியில் உறைகிணறுகள் இருந்தது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டிணப்பாலை நூலாசிரியா் உருத்திரங்கண்ணனார் “உறை கிணற்று புறச்சேரி” எனக் குறிப்பிட்டுள்ளார்.அந்த சங்க காலத்தைச் சோ்ந்த உறைகிணறுதான் கீழடி அகழாய்விலும் கண்டறியப்பட்டுள்ளது.வீடுகள் தோறும் குளியலறைகள் இருந்திருக்கின்றன.
     இப்பகுதியில் மட்டும் ஒரு டன் அளவிற்கு கருப்பு சிவப்பு மட்கல ஓடுகள் கிடைத்துள்ளன.பல ஓடுகளில் “தமிழ் பிராமி” எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமலை மலைக்கொளுந்தீஸ்வரர் கோயிலில் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் இருப்பதுகுறிப்பிடத்தக்கது.
           
         குஜராத்தை சோ்ந்த சூது பவள மணிகளும், ரோமானிய நாட்டு அரிட்டைன் வகை மட்கல ஓடுகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. இது அக்கால மக்களின் வாணிக தொடா்பையும், வணிகச் சிறப்பையும் நமக்கு உணா்த்துகிறது
                                  குறிப்பாக தென்தமிழகத்தில் அகழாய்வில் கிடைக்கும் வெள்ளை வண்ணம் தீட்டப்பட்ட மண்பாண்டங்களும், கொங்குப் பகுதியில் மட்டும் கிடைத்த ரசட் கலவை பூசப்பட்ட மண்பாண்டங்களும் இங்கு கிடைத்துள்ளன. ரசட் கலவையின் தாக்கம் இருப்பதைப் பார்க்கும்போது கொங்குப் பகுதியோடு வாணிபத் தொடா்பில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது
            வரலாற்றின் தொடக்க காலத்திய செங்கல் கட்டிடச் சான்றுகள் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால் இங்கு அதிகளவில் செங்கல் கட்டிடங்கள் இருந்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. சங்ககாலத்தில் வைகை நதியின் வலது கரையில் பண்டைய வணிக பெருவழிப்பாதை இருந்துள்ளது. மதுரையிலிருந்து இராமேஸ்வரம் அழகன்குளம் துறைமுகப் பட்டிணத்துக்கு “கீழடி திருப்புவனம்” வழியாக பாதை இருந்துள்ளது. மதுரைக்கு அருகாமையிலேயே இந்த ஊா் வணிக நகரமாக இருந்துள்ளது.
           
         அழகன் குளத்தில் நடந்த அகழாய்வில் பண்டைய ரோமானிய நாட்டின் உயா்ரக ரவுலட், ஹரிடைன் மண்பாண்டங்கள் கிடைத்தது போன்று கீழடி பள்ளிச்சந்தை புதூரிலும் கிடைத்துள்ளது. அந்த வகையில் அழகன் குளம் துறைமுகப் பட்டிணத்தையும் மதுரையையும் இணைக்கும் இடமாக கீழடி பள்ளிச்சந்தை புதூா் இருந்திருக்கலாம். மேலைநாடுகளுக்கு கடலில் பிரயாணம் செய்யும் வணிகா்கள் இந்த ஊரின் வழியாக சென்றிருக்கலாம். இங்கு கிடைத்துள்ள தடயங்கள், சான்றுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. அந்தவகையில் இந்த இடம் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.
                           முதல்கட்ட ஆய்வில் கிடைத்ததைவிட, இரண்டாம் கட்ட அகழாய்வில் 10-க்கும் மேற்பட்ட சங்ககால கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அக்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் முத்திரை கட்டைகள் (இரப்பா் ஸ்டாம்ப்), எழுத்தாணிகள், அம்புகள் , இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் எழுத்துக்களுடைய மட்பாண்ட ஓடுகள் உட்பட 5300-க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. “அரிக்கன்மேடு, காவிரி பூம்பட்டிணம், உறையூா் போன்ற அகழாய்வில் கிடைத்ததைவிட அதிக எண்ணிக்கையில் தொடா்ச்சியாக பல கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
            சங்ககாலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழாய்வு மாற்றியமைத்துள்ளது. கீழடியில் கண்டறியப்பட்டுள்ள கட்டிடங்கள் மூலம் ஒரு நகர நாகரீகம் இருந்ததற்கான அத்தனை அடிப்படை ஆதாரங்களும் கிடைத்துள்ளன.தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் சுடுமண் முத்திரை கிடைத்தது இதுவே முதல்முறை.

Sunday, 22 September 2019






 

PUBLIC SERVICE ADVERTISMENT

 

  SMOKING CAUSES CANCER

Image result for psa advertising
                                                                                                              

                                          

WEAR A HELMET                                            


Image result for wear helmet psa advertisement
                                  

                         





    THOSE WHO SAVE NATURE END UP HELPING THEMSELVES

Image result for psa advertising
                              

                                   SAVE WATER ,  SAVE WORLD

Related image


                   DON'T ADDICT THE PRESCRIPTIONS PAINKILLERS                  

Image result for PSA ADVERTISEMENT


                             DON'T DRINK AND DRIVE

Image result for DRINKS AWARENESS ADVERTISEMENTS

                                   STOP CHILD LABUR

Image result for PSA Advertisement

                                  



















                                                  OBEY TRAFFIC RULES


Image result for public service advertising in india



                               SAVE PAPER , SAVE PLANET

Image result for psa advertisement

















                            SAVE TREES , SAVE WORLD


Image result for psa advertisement IN save trees












                                                         

AD FOR MAGAZINE

Related image



                                    COMMERCIAL ADVERITSMENT


GENERAL KNOWLEDGE




                        GENERAL KNOWLEDGE


           ABOUT HISTORY OF PRESS  IN INDIA

 Image result for journalism related gk







1.  Who among the following published first newspaper in India?


    
       A. James Augustus Hickey
       B. Lord William Bentinck
       C. Lord Cornwallis
       D. Sir Thomas Munro
       Ans: A

2. What was the title of India’s first newspaper?
    A. Punjab Mirror
    B. The Bengal Gazette
    C.  Azad Hind
    D. Enlighten India
     Ans:B

3. Which of the following regulation envision that press without licence was a penal offence?
      A. Press Act of 1835 or Metcalfe Act
      B. Lord Wellesley enacted Censorship of Press Act, 1799
      C. Licensing Regulations, 1823
      D. Licensing Act, 1857
      Ans: C

     4. Which of the following statement is/are correct?
     A. The magistrate’s action was final and no appeal could be made in a court of law.
     B. A vernacular newspaper could get an exemption from the operation of the Act by submitting      proof to a government censor.
     C. Neither A nor B
     D. Both A and B
      Ans: D


5. Which of the following act/regulation empowered the magistrates to confiscate press property which published objectionable material likely to cause incitement to murder/acts of violence against the Extremist nationalist activity?
     A. Indian Press Act, 1910
     B. Newspaper (Incitement to Offences) Act, 1908
     C. Vernacular Press Act, 1878
     D. Registration Act, 1867
     Ans: B
6. Which of the following act relaxed the restrictions put by the Metcalf Act?
     A. Licensing Act, 1857
     B. Press Act of 1835
     C. Vernacular Press Act, 1878
     D. Registration Act, 1867
     Ans :D

7. Which of the following statement is/are correct?
    A. Censorship of Press Act, 1799 was introduced by Lord Wellesley.
    B.  Licensing regulation, 1823 was introduced by John Adams.
    C. Press Act of 1835 by Metcalfe.
    D. All the above
    Ans :D



8. Who were the first Europeans, brought a printing press to India?
    A. French
    B. Dutch
    C. English
    D. Portuguese
    Ans: D

9. Which of the following was the first book published in India by Portuguese?
     A. Jesuit of Goa
     B. Jesus of Pondicherry
     C.  The Christian Monarch
     D.  The Scheme of William Bolts
     Ans: A
10. Who among the started Bombay Samachar?
    A. Fardaonji Murzban
    B. Raja Ram Mohan Roy
    C. James Silk Buckingham
    D. Shishir Kumar Ghosh
    Ans: A





Tuesday, 13 August 2019

SUPER DELUXE REVIEW



                                        சினிமா விமர்சனம்

படம்              : சூப்பர் டீலக்ஸ்
இயக்குனர் : தியாகராஜ குமாரராஜா
நடிகர்கள்    : விஜய் சேதுபதி , பகத் பாசில் , மிஸ்கின் , சமந்தா , ரம்யா                                            கிருஷ்ணன் , காயத்ரி
இசை             : யுவன்சங்கர்ராஜா
தயாரிப்பு    : சத்யராஜ நடராஜன்
Image result for superdeluxe tamil review


மையக்கதை : செக்ஸ், விடலை சிறுவர்கள் முதல் வயோதிக பெரியவர்கள் வரை எப்படி பேச்சாகவும், செயலாகவும் முழுக்க முழுக்க வியாபித்திருக்கிறது என்பதை காண்போர் கண் மற்றும் காதுகள் கூசும் அளவிற்கு, ரொம்பவே டீடெய்லாக சித்தரிக்க வேண்டும் என்பதையே இப்படத்தின் மையக்கருவாக கொண்டு செயல்பட்டிருக்கின்றனர் இப்படக்குழுவினர் மொத்தமும் என்றால் அது மிகையல்ல!

கதை : கணவனுக்குத் தெரியாமல் கல்லூரி காலத்து காதலனை வீட்டிற்கே செக்ஸுக்கு அழைத்து கொலை பாவத்துக்கு ஆளாகும் இளம் பெண், அவரை கொலைப்பழியில் இருந்து மீட்டெடுக்க போராடும் கணவன், பள்ளி இறுதிப் படிப்பு முடிவதற்கு முன் பள்ளியறை படிப்பு படிக்க ஆசைப்பட்டு 3D வீடியோ சிடிக்கள் வாங்கி வந்து டிவி முன் அமரும் மாணவர்கள் நால்வரில் ஒரு மாணவனின் தாய்தான் அந்த செக்ஸ்பட நடிகை என்பது தெரிந்ததும் ஆத்திரத்திற்கு உள்ளாகும் அந்த மாணவனால் அவதிக்குள்ளாகும் அந்த மாணவர்கள் படும் பாடு இந்த செக்ஸ் படநடிகையின் கணவர் சாமியார் ஆகி மக்களை படுத்தும் பாடு,

திருமணமாகி சில நாட்களிலேயே கர்ப்பவதி மனைவியை பிரிந்து மும்பை சென்று தன் ஹார்மோன் கோளாறால் ஐந்தாறு வருடங்களுக்கு பின் அரவாணியாக ஊர் திரும்பி பெற்ற மகனுடன் அவன் படிக்கும் பள்ளிக்கு போய் சொல்ல இயலாத அவமானங்களுக்கு உள்ளாகும் ஒரு திருநங்கைக்கும் அவரது குடும்பத்திற்கும் ஏற்படும் அவல நிலை, இவர்களது இன்னல்களையெல்லாம் தனது செக்ஸ் வக்கிர பார்வைக்கான ஜன்னல்கள் ஆக்கி, அகப்படும் அந்த குடும்பங்களின் உறுப்பினர்களை தனது செக்ஸ் வடிகால் ஆக்கிகொள்ளத் துடிக்கும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இதுதான் "சூப்பர் டீலக்ஸ் "படத்தின் மொத்தக்கதையும் களமும்

முடிவுரை : படத்தின் பல்வேறு விதமான கதாபாத்திரங்களை ஒன்றாக இணைக்கும் சம்பவங்கள் பார்ப்பதற்கு சற்று வேடிக்கையாக இருப்பதோடு மட்டுமில்லாமல், வியப்பையும் உண்டாக்கும் வண்ணம் இருப்பது வாழ்க்கையின் எதார்த்தத்தை காட்டுகிறது .

கருத்து  :    யுவன் ஷங்கர் ராஜா-வின் பின்னணி இசை படத்திற்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது .மக்களின் நடப்பு வாழ்க்கையையும், இயல்பையும் எடுத்துரைத்திருப்பது படம் பார்க்க கொஞ்சம் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.படத்தில் ஆங்காங்கே முகம் சுளிக்கும் விதமாக சில காட்சிகள் அமைந்துள்ளதால் இப்படம் குடும்பங்களிடையே பெரிதும் வரவேற்பை   பெறவில்லை .மொத்தத்தில் படமானது 100க்கு 92 மதிப்பெண் பெரும்.